பிறந்த ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் அதிர்ஷ்டமா?

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்தில சுப கிரகங்கள் இருந்தாலும் சரிசுப கிரகங்கள் பார்த்தாலும் சரி அவருக்கு பிறக்கும்போதே தனக்கு சொந்தமான வீடு இருக்கும் அமைப்பை பெற்றிருக்கும் பாக்கியசாலியாவார் . லக்னத்துக்கு நான்காம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் - பார்த்தால் மட்டும் போதாது . அந்த நான்காம் வீட்டுக்கு உரிய கிரகம் - மறைவு ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு 6 - 8 - 12 - போன்ற இடங்களில் அமராமல் இருக்கவேண்டும்.
இப்படி இருந்தாலும் வீடு மனைகாரன் பூமி காரன் என்று சொல்ல கூடிய செவ்வாய் பகவான் அவருடைய ஜாதகத்தில் கேந்திர இடம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு (1 - 4 - 7 - 10)- போன்ற இடங்களிலும் திரிகோணம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு ( 1 - 5 - 9 -) போன்ற இடங்களில் ஆட்சி - உச்சம் - போன்ற செழிப்பான அமைப்புகளை பெற்றிருக்கும்போழுது அந்த ஜாதகருக்கு வீடு மனை பாக்கியம் சிறப்பாக அமையும்.
சிலருக்கு வீடு மனை யோகம் சிறப்பாக அமைந்து இருந்தாலும் கூட வீடு கட்டும் பணியை தொடங்கி வீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவரின் ஜாதகத்தில் தசா புத்தியில் நடைபெறும் கிரகங்களின் செயல்பாடுகளால் வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்படும் . அதாவது தினக்கோள்கள், மாத கோள்கள் , ஒவ்வொரு ராசி கட்டத்தில் , மாறி கோசார ரீதியாக இடம்பெயரும் பொழுது இந்த தடங்கல்களை ஏற்படுத்தும்.
இந்த தடங்கல்கள் நீங்க இதற்க்கு பரிகாரமாக வீடு நல்ல முறையில் கட்ட இந்தியாவில் தமிழகத்தில் உள்ள திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை வணங்க வேண்டும்.
காலையில் நீராடி திருவிளக்கேற்றி இப்பாடலை, 12 முறை படியுங்கள்.
நன்றுடையானை தீயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை சென்றடையாத திருவுடையானை உமை யொரு பாகம் உடையானை சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.
இந்த பாடலை தினமும் படிக்க மலைக்கோட்டை மாதிரி உறுதியான வீடு அமைவதோடு மட்டுமல்லாமல் வீடு கட்டும் வேலை எந்த வித தடையுமில்லாமல் நடைபெறும் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ராஜா முத்தையா மருத்துவமனை அருகில், கலுங்குமேடு அண்ணாமலை நகர், சிதம்பரம், தமிழ் நாடு,
இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers: வாட்சப் எண் 91 + 8122733328 91 + 7604917240 91 + 9384372941
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



