கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா.!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
3 months ago
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா.!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவை களமிறக்க மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இச்சந்திப்பில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

MORE NEWS IN LANKA4.COM

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!