மே மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவு!
#SriLanka
#Lanka4
#money
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
6 months ago
அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை இன்று வியாழக்கிழமை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
அஸ்வேசும நலத்திட்ட பயனாளிகள் திட்டத்தின் கீழ் தகுதிப்பெற்றுள்ள சுமார் 14 இலட்சத்து 23 ஆயிரத்து 895 (1,423,895) குடும்பங்களுக்கென 11 ஆயிரத்து 274 மில்லியன் ((11,274,314,000.00) ரூபாய் நிதி வங்கி கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று வியாழக்கிழமை (22) முதல் தங்கள் பயனாளி வங்கிக் கணக்குகள் மூலம் பயனாளிகள் உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி சபை அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
