கொத்மலை பகுதியில் மற்றுமோர் விபத்து - 17 பேர் படுகாயம்!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 months ago
கொத்மலை, ரம்பொட பகுதியில் இன்று (14) பிற்பகல் வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொத்மலையின் ரன்போட கரடிஎல்ல பகுதியில் நடந்த பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகிலும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஈடுபட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
