பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த திட்டம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 months ago
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா என்பதை ஆராயும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
