நாடு சரியான மாற்றத்தை நோக்கி வழிநடத்தப்படுகிறது - டாக்டர் ஹரிணி அமரசூரிய!
#SriLanka
#vesak
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

நாடு சரியான மாற்றத்தை நோக்கி வழிநடத்தப்படும் இந்த நேரத்தில், மனித இதயங்களை குணப்படுத்த வெசாக் காலம் மிகவும் பொருத்தமான நேரம் என்று தான் நம்புவதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.
தனது வெசாக் தின வாழ்த்து செய்தியில், அனைவரையும் ஒற்றுமையாக ஒன்றிணைய அழைக்கிறேன் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சில நாடுகளில் தற்போது பரவி வரும் போர்த் தீப்பிழம்புகள் அணைந்து, உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ முடியும் என்பதே இந்த நாட்டின் அனைத்து குடிமக்களின் விருப்பமும், தனது சொந்த விருப்பமும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



