பிரியாணியால் பிரிந்த குடும்பம் : யாழில் சம்பவம்!

#SriLanka #Jaffna # divorce #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago
பிரியாணியால் பிரிந்த குடும்பம் : யாழில் சம்பவம்!

தனது மனைவிக்கு பிரியாணி செய்யத் தெரியாததால் விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறி, யாழ். நீதிமன்றத்தில் கணவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 கடந்த 3 ஆம் திகதி யாழ். நீதிமன்றத்தில் டென்மார்க் நாட்டு பிரஜை ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 41 வயதுடைய குறித்த நபர், யாழ்ப்பாணத்தின் உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

 குறித்த நபர் பிரியாணியை விரும்பி உண்பவர். ஆனால் அவரது மனைவிக்கு பிரியாணி சுவையாக சமைக்கத் தெரியாத காரணத்தால் தினமும் வீட்டில் வாக்குவாதம் ஏற்படுவதாக அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தொடர்ந்தும் வாக்குவாதத்தை விரும்பாத காரணத்தால் சட்டபூர்வமாக அவரிடமிருந்து பிரிந்து செல்வதற்கு அனுமதி கோரி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746397919.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!