யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உயிரிழப்பு
#SriLanka
#Jaffna
#Death
#Police
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 month ago

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிலே உயிரிழந்தார்.
மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்தபோது மயக்கம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மரணமடைந்தார்.
இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. சடலம் அவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



