இன்றைய வானிலை - இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Thamilini
1 year ago
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (12) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 மைல் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் அந்தத் துறை தெரிவித்துள்ளது.
தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
