சாலை அமைக்கும் திட்டத்தில் முறைக்கேடு : 100 கோடி ரூபாவை கைவசப்படுத்திய அதிகாரிகள்!
#SriLanka
#Astrology
#world_news
#lanka4news
#Lanka4indianews
Thamilini
8 months ago
எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் அதிகாரிகள் பலர், ஏறக்குறைய100 கோடி ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாண சாலைகள் அமைச்சகத்திற்குச் சொந்தமான 77 திட்டங்களில் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்பிலிபிட்டிய பிரதம நீதவான் திலின மகேஷ் பெரேரா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த பிரதேச சபையின் தொழில்நுட்ப அதிகாரி, எழுத்தர் மற்றும் செயலாளர் ஒருவரை இம்மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
