சூடானில் பள்ளிவாசல் மீது துணை ராணுவம் தாக்குதல் - 5 பேர் மரணம்

#Death #Attack #Muslim #Sudan #mosques
Prasu
1 year ago
சூடானில் பள்ளிவாசல் மீது துணை ராணுவம் தாக்குதல் - 5 பேர் மரணம்

சூடான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். 

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். 

இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தை குறிவைத்து துணை ராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742925926.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4