தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்
#SriLanka
#Coconut
#Lanka4
Mayoorikka
1 month ago

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



