சிங்கப்பூரில் மூன்று இந்தியர்களுக்கு மரண தண்டனை

#Arrest #Prison #drugs #Singapore #Indian
Prasu
1 year ago
சிங்கப்பூரில் மூன்று  இந்தியர்களுக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. 

அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன், கோவிந்தசாமி விமல்கந்தன் ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். 

கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணைimages/content-image/1742753271.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4