கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!
#SriLanka
#Arrest
#lanka4_news
#LANKA4TAMILNEWS
#Kanemulla Sanjeeva
Thamilini
1 year ago
கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைக்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான ஜூலியன் மாதவன் என அழைக்கப்படும், கொழும்பு 15, ஹெலமுத்து செவனாவில் வசிக்கும் குறித்த சந்தேகநபர் மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற அறைகளை சுட்டிக்காட்டி கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.