பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வானிலையில் ஏற்படும் மாற்றம்!
#SriLanka
#weather
#Rain
#Lanka4
#Tamilnews
#LANKA4TAMILNEWS
Thamilini
1 year ago
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
