வெற்றிகரமாக பூமியில் கால் பதித்தார் சுனிதா வில்லியம்ஸ்!

#America #world_news #NASA
Mayoorikka
1 year ago
வெற்றிகரமாக பூமியில் கால் பதித்தார் சுனிதா வில்லியம்ஸ்!

9 மாதங்களுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளனர்.

 17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. தரையிறங்கிய டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் குழு மீட்டுள்ளனர். அதன்பின் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதித்த நிகழ்வை நாசா நேரலையாக ஒளிபரப்பியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

 இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்கா அரசு முயற்சி செய்தது.

 இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். 

அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. க்ரு டிராகன் விண்கலம், அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 10.45 மணிக்கு விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

 சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் நிகழ்வாக மாறியது. நாசா தனது அனைத்து மிஷன்களை போல இதையும் நேரடியாக ஒளிபரப்பியுள்ளது.



லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை



images/content-image/1742351254.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4