சந்திவெளி காட்டுப் பகுதியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு!
#SriLanka
Dhushanthini K
3 months ago

சந்திவெளி காவல் பிரிவுக்குட்பட்ட தேவபுரம் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (15) கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



