பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்டே கைது

#Arrest #Phillipines #Fraud
Prasu
1 year ago
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்டே கைது

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

2016-22 காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த ரோட்ரிகோ டுட்டெர்டே, நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ரோட்ரிகோ டுட்டெர்டே, மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741710956.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4