உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 22 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#Lanka4 #Numerology
Prasu
1 month ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 22 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

ராகுவின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் இந்த 22 ம் எண் மிதுன ராசியில் வரும் எண்ணாகும் . இந்த எண் சாமர யோகம்  என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்த கூடிய எண்ணாகும் .

ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழையிலிருந்து பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் இருப்பவர்களும் உண்டு.

"விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யபெற்ற திருவடிகளை உடைய உனது ஸாயுஜ்ய பதவியை கொடுக்கிறாய் " என மந்திர நூல்களில் அம்பாளின் திருவருளை பெறக்கூடிய அமைப்பை இந்த 22 ம் எண் உணர்த்துகிறது .

இந்த எண் காரர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள் . மனம் குறுக்கு வழியில் பொருள் சேர்க்க தூண்டும் . லாகிரி வஸ்துக்கள் போக சுகங்களிலும் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகின்றன .  நேரங்களில் தன்னை இழக்கும் மயக்க உணர்ச்சிகளுக்காக மண், மனை, பூமி, பொருள்களை எல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்களை நோக்கி விரையும் சூழ்நிலையும் உண்டாகும்.

துர் மந்திரங்களால் சூழப்படும் சூழ்நிலைக்கு இவர்கள் உள்ளாவார்கள் சுய நலகாரர்களின் ஒரு சிலரின் சூழ்ச்சியால் அவர்களின் சுகத்துகாக இவர்கள் பலி கடா ஆவார்கள் .

செல்வம், நல்வாழ்க்கை, துணை, வாகனம், லௌதீக சுகங்கள், ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உயர் பதவியினரின் நட்பு போன்றவை இவர்களுக்கு உண்டாகும்.  

எந்த கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை.சிறந்த நிர்வாக திறன் ஆகியவற்றை இந்த எண் காரர்கள் பெற்றிருப்பார்கள்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741205682.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!