காங்கோவில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் - 53 பேர் மரணம்
#Death
#Warning
#Fever
#Congo
Prasu
10 months ago
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே இதுகுறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
