காசா போர் நிறுத்த ஒப்பந்தம் : மேலும் பல பணயகைதிகள் விடுவிப்பு!

காசா பகுதியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இன்று மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஹமாஸ் தாங்கள் வைத்திருந்த ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் 602 பாலஸ்தீன கைதிகளை விடுவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட ஆறு பணயக்கைதிகள் பற்றிய தகவலை ஹமாஸ் அறிவித்திருந்தது. இந்த ஆறு பேரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலியர்களும் அடங்குவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 9 ஆம் திகதி முதல் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் இறுதி கைதிகள் பரிமாற்றம் இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



