பொரளை மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் சடலம்
#SriLanka
#Murder
#Kanemulla Sanjeeva
Prasu
4 months ago

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் பொரளை பகுதியிலுள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கணேமுல்ல சஞ்சீவவின் சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டது.
பிரேத பரிசோனைக்கு பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் மூத்த சகோதரி அவரது சடலத்தை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



