ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

#PrimeMinister #Attack #Prison #Japan
Prasu
1 year ago
ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

ஜப்பான் முன்னாள் பிரதமர் புமியோ கிஷிடா, கடந்த 2023ம் ஆண்டு வாகயாமா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது பைப் வெடிகுண்டு வீசப்பட்டது.

தாக்குதல் நடத்திய ரியுஜி கிருமா என்ற வாலிபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை வாகயாமா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணையின் ஆரம்பத்தில், தான் குற்றம் செய்யவில்லை என்றும், கிஷிடாவை கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரியுஜி கிருமா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4