வவுனியாவில் மின் கம்பத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி!
#SriLanka
#Vavuniya
#Accident
Thamilini
1 year ago
வவுனியா - மன்னார் வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில், நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மற்றுமொரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூவரசன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரணடு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நிமல் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்