டிரம்ப்பை தொடர்ந்து ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்

#PrimeMinister #Israel #Warning #Netanyahu
Prasu
1 year ago
டிரம்ப்பை தொடர்ந்து ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது.

பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

இதனிடையே, வரும் சனிக்கிழமை அடுத்தகட்டமாக மேலும் 3 இஸ்ரேலிய பணய கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் சனிக்கிழமை பணய கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை என்றால் காசாவில் நரகம் வெடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பிரதமர் நெதன்யாகு தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இந்நிலையில், பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு சனிக்கிழமைக்குள் விடுதலை செய்யவில்லையென்றால் காசாவில் தாக்குதலை மீண்டும் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், ஹமாஸ் ஆயுதக்குழு வரும் சனிக்கிழமை மேலும் சில பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம். காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்க தயாராகும்படி பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4