இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

#India #google #NarendraModi #SundarPichai
Prasu
1 year ago
இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்ஸ்-இல் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.

அந்த வகையில், பாரிசில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். 

அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவிற்கு கொண்டு வரும் "நம்பமுடியாத வாய்ப்புகளை" எடுத்துரைத்தார். மேலும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக கூகுள் மற்றும் இந்தியா இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் குறிப்பிட்டார். 

இது குறித்து பேசிய அவர், "AI உச்சி மாநாட்டிற்காக பாரிசில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாரிஸில் நடந்த இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார், அப்போது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த கருத்தரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4