EPF தொடர்பில் விசேட அறிவிப்பு!
#SriLanka
Mayoorikka
1 year ago
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்காக, 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஒரு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஒரு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் வழியாக, கடினமின்றி தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்