மாவையின் உயிரைப்பறித்த கட்சியின் 19 உறுப்பினர்கள்! சமூக ஊடகங்களில் வைரல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவரை சுகவீனப்படுத்தி உயிரிழக்க கட்சியின் சில உறுப்பினர்களே காரணம் என தங்கராசா ஆவேசமாக கூறியுள்ளார்.
சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது இறுதி சடங்கிற்கு வந்தால் அடித்து துரத்துவேன் என அவர் வைத்தியசாலையில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வைத்தியசாலையில் மாவையை பார்வையிட சென்ற சுமந்திரன் தரப்பில் குலநாயகம் மாவையின் தங்கச்சியின் பேச்சில் திரும்பி ஓடியமை குறிப்பிடத்தக்கது அமரத்துவம் அடைந்த பெருந்தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் இவர்கள் எவரையும் கலந்து கொள்ளவிடமாட்டோம் என அன்னாரின் சகோதரர், பிள்ளைகள் கண்டிப்பான உத்தரவு விட்டுள்ளதாகவும் சமூக ஊடகளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் பதிவு வருமாறு:
பீற்றர் இளம் செழியன் – முல்லைத்தீவு
திருமதி சாந்தி சிறிஷ்கந்தராசா – முல்லைத்தீவு.
தி. பரம்சோதி – மன்னார்.
நா.சேனாதிராசா – வவுனியா.
சீ.வி.கே. சிவஞானம் – நல்லூர்.
கேசவன் சயந்தன் – சாவகச்சேரி.
இ. சாணக்கியன் – மட்டக்களப்பு.
ப.சத்தியலிங்கம் – வவுனியா.
கி.துரைராசசிங்கம் – மட்டக்களப்பு.
தி.சரவணபவன் – மட்டக்களப்பு.
கி.சேயோன் – சந்திவெளி.
த.கலையரசன் – அம்பாறை.
மு.கண்ணதாசன் – அம்பாறை.
திருமதி ரஞ்சினி கனகராசா – மட்டக்களப்பு.
ச.இரத்தினவேல் – வெள்ளவத்தை.
எம். ஏ. சுமந்திரன் – யாழ்ப்பாணம்.
ப.கமலேஷ்வரன் – முல்லைத்தீவு.
க.செல்வராசா – வன்னி.
சூ.சேவியர் குலநாயகம்.
மாவை சேனாதிராசா அவர்களின் உயிரை குடித்த அயோக்கியர்கள். அயோக்கியர்களின் செயலால் மாவை ஐயாவுக்கு இந்த நிலைம…
தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன்.
அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார்.
சுமந்திரனின் வழிகாட்டலில் மத்திய குழுவில் உள்ள உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பதவி விலக நிர்பந்திக்க செய்தமை அவருடைய மன அழுத்தத்திற்கு காரணம், சொந்த கட்சியின் தலைமைக்கு இந்த நிலைமை அத்தோடு 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் CVK சிவஞானமும், பதில் செயலாளர் சத்தியலிங்கமும் மாவையுடன் கடும்தொணியில் பேசியிருந்ததாகவும், சுமந்திரன் உங்களை கட்சியில் இருந்து நிச்சயம் நீக்கியே தீருவார் என்று காட்டமாக மாவையிடம் தெரிவித்ததாகவும் மாவிட்டபுர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்களால் கடும் மனஉளைச்சலில் இருந்த மாவை சேனாதிராச சுயநினைவு இழந்த நிலையில் வீட்டில் விழுந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 29,01,2025, இரவு மரணித்தார்.
இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்ற தகவலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



