4 இஸ்ரேலிய பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

#Women #Israel #release #Hamas #Hostages
Prasu
1 year ago
4 இஸ்ரேலிய பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர். பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. 

விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4