குவைத்தில் இரு தமிழர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வந்த இரு தமிழர்கள் உட்பட 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய போது அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மங்கலம்பேட்டை சேர்ந்தவர் மூன்று பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
உரிமையாளர்கள் அளித்த அறையிலேயே இவர்கள் தங்கி வந்துள்ளனர். குவைத்தில் இப்போது மிகக் கடுமையான குளிர் நிலவும். சிலநேரங்களில் 5, 6 டிகிரி வரை கூட வெப்பம் குறையும். வெப்பம் 5 டிகிரி வரை குறைந்துள்ளது.
இதனால் அவர்கள் அறைக்கு வெளியே தீ மூட்டிக் குளிர் காய்ந்துள்ளனர். குளிர் அதிகமாக இருந்ததால் தீயை அப்படியே அறைக்கு உள்ளேயும் எடுத்து வந்துவிட்டனர். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் அப்படியே தங்களை அறியாமல் தூங்கிவிட்டனர்.
உள்ளேயே தீ எரிந்து கொண்டு இருந்ததால் அறையில் இருந்த ஆக்சிஜன் குறையத் தொடங்கியுள்ளது. மெல்ல மூச்சு திணறி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த நபர்கள் கடலூர் மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



