யாழ்ப்பாணத்தில் நிமோனியாக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka
Mayoorikka
11 months ago
யாழ்ப்பாணத்தில் நிமோனியாக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

 இவர் கடந்த 30ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்ப்பிக்கப்பட்டார்.

 இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

 இவர் நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை