TikTok அணுகலை முடக்க முடிவு செய்துள்ள அல்பேனிய அரசாங்கம்!

#SriLanka #Albania
Thamilini
1 year ago
TikTok அணுகலை முடக்க முடிவு செய்துள்ள அல்பேனிய அரசாங்கம்!

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த தடை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

 அல்பேனியாவில் கடந்த மாதம் ஒரு பள்ளியில் 14 வயது மாணவன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமே இந்த TikTok ஒடுக்குமுறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். இருப்பினும், முன்மொழியப்பட்ட TikTok தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாக TikTok கூறியது. 

 கொலை செய்யப்பட்ட 14 வயது பள்ளி மாணவனோ அல்லது கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரோ TikTok கணக்குகளை வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று TikTok கூறுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4