புஷ்பா 2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு மூளைச்சாவு

#Cinema #Death #Tamilnews #theaters
Prasu
10 months ago
புஷ்பா 2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு மூளைச்சாவு

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா-2' திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ந்தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியானது.

'புஷ்பா' படத்தைப் பார்க்க கதாநாயகன் அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு வந்தார். அப்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் சிறப்பு காட்சிக்கு வந்த அல்லு அர்ஜுனைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 24 வயதுடைய ரேவதி என்ற பெண் ஒருவர் இறந்தார். அவரது 8 வயது மகன் உயிருக்கு போராடியபடி சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே ரேவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரேவதி இறப்புக்கு காரணமான அல்லு அர்ஜூனை போலீசார் கடந்த 13ந்தேதி கைது செய்தனர்.

தெலுங்கானா ஐகோர்ட் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதால் மறுநாள் காலை ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். 

 இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!