நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்

#Actor #TamilCinema #Birthday #Vijay #rajini kanth
Prasu
10 months ago
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றது.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் - "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!