சிரியா நாட்டவர்களின் புகலிடக்கோரிக்கை பரிசீலனையை இடைநிறுத்திய சுவிட்சர்லாந்து
#Switzerland
#government
#Syria
#Asylum Seekers
Prasu
1 year ago
சிரியா நாட்டவர்களின் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பதை சுவிட்சர்லாந்து இடைநிறுத்தியுள்ளது.
சிரியாவில் நிலவிவரும் குழப்பமான அரசியல் சூழலை கருத்தில் கொண்டு பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் சிரியா நாட்டவர்களின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனையை நிறுத்தியுள்ளன.
அதேபோல, சுவிட்சர்லாந்து அரசும், சிரியா நாட்டவர்களின் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பதை இடைநிறுத்தியுள்ளது.
சிரியாவில் அசாத் அரசு கவிழ்ந்துள்ள நிலையில், இப்போது சிரியா நாட்டவர்களுக்கு புகலிடம் அளிக்க சரியான காரணங்கள் உள்ளனவா என்பதை துல்லியமாக மதிப்பீடு செய்யும் நிலையில் சுவிட்சர்லாந்து இல்லை என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.