வங்காளதேசத்தில் 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல்

#Hindu #Protest #Temple #Attack #Bangladesh
Prasu
1 year ago
வங்காளதேசத்தில் 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். 

அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை விடுதலை செய்யக் கோரி கோர்ட்டு முன்பு ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்துக்கள் மீது ஒரு கும்பலும் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். 

இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 24 மணிநேர கெடு விதித்தனர். மேலும் இன்று கோர்ட்டு நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே சிட்டகாங்கில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

 சிட்டகாங்கின் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோவில், மான்சா மாதா கோவில்,ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோவில் ஆகிய கோவில்களின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4