பிரித்தானிய மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

#Warning #Climate #England
Prasu
10 months ago
பிரித்தானிய மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனி மற்றும் பனிப்பொழிவுக்கான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை மற்றும் நவம்பர் 19 செவ்வாய் கிழமைக்கு இடையில் பனிப்பொழிவு ஏற்படும் எனக் கூறியுள்ள வானிலை அலுவலகம் 42 மணிநேர மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தெற்கு ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி, வடகிழக்கு இங்கிலாந்து, யார்க்ஷயரின் பகுதிகள் மற்றும் வடமேற்கு இங்கிலாந்தின் பகுதிகள் உட்பட லங்காஷயர் மற்றும் கம்பிரியாவை உள்ளடக்கிய பகுதிகளில் திங்கள் காலை 10 மணி முதல் அடுத்த வார செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை இந்த கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதிகபட்சமாக 20 செ.மீ பனிப்பொழிவு ஏற்படலாம். தாழ்வான பகுதிகளில் 10 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!