பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - 24 பேர் மரணம் (காணொளி)

#Death #Pakistan #Railway #BombBlast
Prasu
1 year ago
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - 24 பேர் மரணம் (காணொளி)

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரெயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் சுமார் 24 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.

ரெயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக பிளாட்பாரத்தில் குண்டு வெடித்தது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது. 

ரெயில் வந்திருந்தால் பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும். தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், முன்னதாகவே அந்த முடிவுக்கு வர முடியாது. 

குண்டு வெடிப்பு எப்படி நடைபெற்றது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ரெயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர் என குவெட்டா எஸ்.எஸ்.பி. (Senior Superintendent of Police) தெரிவித்துள்ளார்.

 மீட்பு குழுவின் தலைவர் ஜீஷன் "ரெயில் நிலையத்திற்கு உள்ளே பிளாட்பாரத்தில் குண்டு வெடித்தது" எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!