அல்ஜாரி ஜோசப்புக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை

#Cricket #Player #Banned #westIndies
Prasu
1 year ago
அல்ஜாரி ஜோசப்புக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 263 ரன்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி, தொடரையும் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

முதலாவது இன்னிங்சில் 4-வது ஓவரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது 2 பேர் ஸ்லிப்பில் இருந்தனர். 

அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின்போது ஸ்லிப்பில் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால் கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அந்த ஓவரை ஜோசப் மெய்டன் ஓவராக வீசினார். பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப்பிடம் எதுவும் தெரிவிக்காததால் அந்த ஓவர் முடிந்தபின் ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறினார். 

பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார். அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்று வீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். 

இதனால் பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4