காசா போரில் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்!
#SriLanka
Dhushanthini K
5 months ago

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காசா பகுதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ மோதல்கள் காரணமாக கடந்த 13 மாதங்களில் காஸா பகுதியில் 43,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பின் மனித உரிமை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள், 26 சதவீதம் பேர் பெண்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின்படி, மொத்த இறப்புகளில் 80 சதவீதம் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் வீடுகள் மீதான தாக்குதல்களின் விளைவாக நிகழ்ந்தன.



