நுவரெலியாவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்து - ஒருவர் பலி

#SriLanka #Death #Accident #NuwaraEliya
Prasu
1 year ago
நுவரெலியாவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்து - ஒருவர் பலி

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் .

 விபத்து குறித்து இராகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4