பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் பணம் கோரி கொலை மிரட்டல்

#Murder #Actor #Threat #Bollywood
Prasu
11 months ago
பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் பணம் கோரி கொலை மிரட்டல்

பாலிவுட் திரையுலகில் கிங் கான் என்று அறியப்படும் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் 50 இலட்சம் கேட்டுக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

 இதற்கு முன்னதாக, நடிகர் சல்மான்கானுக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!