அமெரிக்காவில் தேர்தல் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

#Election #Arrest #Murder #America #Threat #Workers
Prasu
1 year ago
அமெரிக்காவில் தேர்தல் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள தேர்தல் பணியாளர்களை வெடிவைத்துத் தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கக் கூட்டரசு அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் ஒருவரிடமிருந்து அந்த கடிதம் வந்தது போல அதை 25 வயது நிக்கல்ஸ் விம்பிஷ் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.விம்பிஷ் தேர்தல் பணியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 16ஆம் திகதியன்று வாக்காளர் ஒருவருக்கும் விம்பிஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்காளர் எழுதியது போல கடிதம் ஒன்றைப் புனைந்து ஜார்ஜியா மாநிலத் தேர்தல் கண்காணிப்பாளருக்கு விம்பிஷ் அதை அனுப்பி வைத்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர். 

அந்தக் கடிதத்தில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, விம்பிஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

 அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவும் மாநிலங்களில் ஜார்ஜியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4