34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட பாதை
                                                        #SriLanka
                                                        #Jaffna
                                                        #Road
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        11 months ago
                                    
                                 
                யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று முதல் அனுமதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            