இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி?
#SriLanka
#Tourist
Mayoorikka
11 months ago
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனைகளை புதுப்பித்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என உள்வரும் மற்றும் வெளிச் செல்வதற்கான பயண முகவர் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் முன்பதிவுகள் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இந்த நிலையில் நாடு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நளின் ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.