மின்கட்டண குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்!
#SriLanka
#AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
எதிர்வரும் சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (29.10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அடுத்த 3 வருடங்களில் முழு நாடும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு வர்த்தக சபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் சம்பளமும் பெறாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆதரவு வழங்குவதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.