கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை!

#SriLanka #government
Mayoorikka
1 year ago
கோட்டாபயவின்  ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களின் வழியான தொடர்பாடல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 சீனி வரி மோசடியினால் அரசாங்கத்திற்கு 14 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த சம்பவம் தொடர்பிலான கணக்காய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 ஒரு இறக்குமதியாளருக்கு சாதக நிலை ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக பெருந்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மீண்டும் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை