பெண்களே அவதானம்! அதிக ஊதியம் கொடுப்பதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏமாற்றப்படுகிறார்கள்

#SriLanka #Foriegn #Workers
Mayoorikka
1 year ago
பெண்களே அவதானம்! அதிக ஊதியம் கொடுப்பதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏமாற்றப்படுகிறார்கள்

வெளிநாட்டிலே வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் அவர்களுக்கு அதிக சம்பளத்தை பெற்று தருவதாகவும் அதற்கான முகவர் கூலியும் அறவிடப்பட மாட்டோம் என்று சில விளம்பரங்கள் முகநூல்களிலே உலாவி வருகின்றது.

 அது மாத்திரமல்ல நபர்கள் ஊடாகவும் பரப்பப்படுகின்றது. இதற்காகவே ஒரு சில முகவர்களும் இயங்கி வருகிறார்கள் இவர்கள் பெண்களை தெரிவு செய்து வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக ஒரு சில நாடுகளில் அவர்களை தவறான தொழிலுக்கும் தவறாகவும் வழிநடத்தி வற்புறுத்தி அமர்த்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அதே வேளையிலே இவர்களை வேலைக்கு அழைத்து செல்பவர்கள் வேலை செய்வதற்கான தொழில் விசாவோ அல்லது அனுமதிகளோ எடுக்காமல் இவர்களை வெறும் சுற்றுலா விசாவில் அழைத்து சென்று அங்கு அவர்களை அடைத்து வைத்து துன்புறுத்துகின்ற சம்பவங்கள் கூட சில இடங்களில் நடைபெற்றிருக்கிறது.

 அதை நாங்கள் அறிந்தும் இருக்கின்றோம் இப்பொழுது துரிதமாக இந்த செயற்பாடுகள் தற்பொழுது அதிகரித்துக் காணப்படுகின்றது. 

 இப்பொழுது தொழில் வாய்ப்பு பிரச்சனைகள் இருப்பதால் இதற்குள் பல பெண்கள் அகப்பட்டு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான விசா இல்லாமல் பலர் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் உள்நாட்டிலும் இடம்பெறுகின்றது. அதாவது வெளி மாவட்டகளிற்கு அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

 ஆகவே இவ்வாறான சம்பவங்களில் இருந்து பெண்கள் அவதானமாக இருக்க லங்கா 4 ஊடகம் வேண்டி நிற்கின்றது. இது போன்ற மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள லங்கா 4 இணையத்தளத்தினையும், லங்கா 4 யூருப் சனலையும் பார்வையிடுங்கள். 

 -லங்கா 4 இன் பிரத்தியேக செய்தி -

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4