ஜனாதிபதி தேர்தல் : செலவு விபரங்களை சமர்பிக்காத 03 வேட்பாளர்கள்!
#SriLanka
#Election
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவுகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 35 வேட்பாளர்கள் தமது அறிக்கைகளை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பத்தரமுல்லை சீலரதன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் அரியநேத்திரன் பாக்கிய செல்வம் ஆகிய மூன்று வேட்பாளர்களும் வருமானம் மற்றும் செலவுகளை ஒப்படைக்கவில்லை எனவும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.