புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது!
#SriLanka
#Examination
Mayoorikka
1 year ago
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடாத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் திங்கட்கிழமை (14) காலை நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளது.
அத்துடன், கசிந்ததாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் கொண்ட குழு கூட்டத்தை தொடர்ந்து திங்கட்கிழமை (14) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வை மீண்டும் நடத்த வேண்டாம் என அக்குழு முடிவு செய்தது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.